நிலவே என்னிடம் நெருந்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை
கோடை இல் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடிவரலாம் என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
நிலவே என்னிடம் நெருந்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
ஊமையின் கனவை யார் அறிவார் என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடிய மேகம் கலையும்முன்னே நீ பாட வந்தாயோ வெண்ணிலவே
நிலவே என்னிடம் நெருந்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
அமைதி இல்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் எனையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன் இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருந்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
May 23, 2009
Subscribe to:
Comments (Atom)